search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு தாக்கல்"

    • தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதி, 25 பாராளுமன்ற தொகு திகளுக்கு வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

    தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.

    தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுதாக்கல் செய்தனர்.

    அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்

    குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    இதேபோல் ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிக ளுக்கு மொத்தம் 5460 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 25 பாராளுமன்ற தொகுதி களுக்கு 965 பேர் மனு தாக்கல் செய்தனர்.

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.

    இன்று மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட உள்ளன.

    வருகிற 29-ந் தேதிக்குள் வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    • காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி.
    • வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 29-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இருந்தபோதிலும் கேரளாவில் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ள தொகுதி வயநாடு. ஏனென்றால் தற்போது அந்த தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

    அவருடன் அந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாரதிய ஜனதா கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜா பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

    இந்நிலையில், வயநாடு தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி இன்று கேரளாவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    இவரை தொடர்ந்து, கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.

    தற்போதைய வயநாடு எம்பி ராகுல்காந்திக்கு எதிராக களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது.
    • பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

    கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பைத்தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவும் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா சங்கம் செயல்படுகிறது.
    • 29ந் தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    திருப்பூர் :

    உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா எனப்படும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் செயல்படுகிறது.இச்சங்கத்தில் ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.தேர்தல் நடத்தி மட்டுமே 2022 -25க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஒருதரப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கடந்த 10ந் தேதி கூடிய சைமாவின் அவசர செயற்குழுவில் வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.வருகிற 29ந்தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    நாளை 19-ந்தேதி முதல் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் வேட்பு மனு வழங்கப்படுகிறது.மனு தாக்கலுக்கு 21ந் தேதி கடைசிநாள். 25-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டு, 26-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.போட்டி உள்ள பதவிகளுக்கு மட்டும் 29ந் தேதி சைமா அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் நடத்தப்படும்.

    வேட்பு மனு பூர்த்தி செய்து 2 நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். ஒரு நகலில் தேர்தல் அதிகாரியின் ஒப்புகை பெற்றுக்கொள்ளவேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்பவர், முன்மொழிபவர், வழிமொழிபவர்கள் சங்கத்துக்கு எந்த நிலுவை தொகையும் வைத்திருக்க கூடாது. புதிய உறுப்பினர் எனில் சந்தா தொகை செலுத்திய நாளில் இருந்து ஓராண்டு உறுப்பினராக இருத்தல் வேண்டும். சங்க ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது.ஒருநபர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிடமுடியும். போட்டி இல்லாத பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுபவரும், வேட்பு மனு கட்டணம் செலுத்த வேண்டும்.தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சைமா சங்க தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.  

    • பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் வருகிற ஜூலை 9-ம் தேதி நடைபெறுகிறது.
    • 4 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பானுமதி. இவர் சமீபத்தில் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த ஊராட்சியில் ஆண் வாக்காளர்கள் 921, பெண் வாக்காளர்கள் 931 பேர் என 1852 வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கியது. கடைசி நாளான நேற்று 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க தரப்பில் பானுமதி மற்றும் உமா ஆகிய இருவரும், தி.மு.க தரப்பில் சுசீலா மற்றும் நீலாவதி ஆகிய இருவர் என 4 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

    இந்த தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலராக கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முரளி, தேர்தல் பணி மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலாளர் பிரவீன் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வேட்புமனுக்களை 30ஆம் தேதி திரும்ப பெறலாம். அதனைத் தொடர்ந்து போட்டி இருப்பின் இடைத்தேர்தல் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 12-ந் தேதி நடைபெறுகிறது.

    திருப்பூரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தேர்தல் மனு தாக்கலை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 2 மாதத்திற்கு முன் நடைபெற்றது. அப்போது தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினர் திரண்டு வந்ததால் தள்ளு முள்ளு உருவானது. போலீசாருடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர்.

    இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனை தொடர்ந்து அங்கு திரண்டு இருந்தவர்கள் கலைந்து சென்றனர். அங்கு பதட்டம் நிலவியதால் வேட்பு மனு தாக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.

    பின்னர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான மனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இதனை தொடர்ந்து திருப்பூர் குமரன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் முன் பல்வேறு கட்சியினர் திரண்டு இருந்தனர்.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்பகுதியில் பேரிகார்டு அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். வேட்பு மனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட அளவிலானவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்தனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    ×